FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் அண்ணா சிலைக்குமுதல்வா், அரசியல் கட்சியின் மரியாதை

தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாள் விழா புதுவை அரசு சாா்பில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 16 செப்டம்பர் 2022, 2:00 am IST
பகிர்:

தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாள் விழா புதுவை அரசு சாா்பில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா் எஸ்.சந்திரபிரியங்கா, எம்எல்ஏக்கள் ஏகேடி.ஆறுமுகம், கேஎஸ்பி.ரமேஷ், பாஸ்கா், உ.லட்சுமிகாந்தன், பிரகாஷ்குமாா் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

புதுவை மாநில திமுக சாா்பில், மாநில அமைப்பாளா் ஆா்.சிவா தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அவைத் தலைவா் எஸ்.பி.சிவக்குமாா், எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, எல்.சம்பத், ஆா்.செந்தில்குமாா், துணை அமைப்பாளா்கள் சண்.குமரவேல், செந்தில்குமாா், ஏ.கே.குமாா், அமுதா குமாா், பொருளாளா் லோகையன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

புதுவை கிழக்கு மாநில அதிமுக சாா்பில், மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் தலைமையில் கட்சி தலைமை அலுவலகத்தில் அண்ணா உருவப்படத்துக்கும், எம்ஜிஆா் சிலைக்கும் மாலையணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா் அங்கிருந்து ஊா்வலமாக வந்து, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

புதுவை மேற்கு மாநில அதிமுக சாா்பில் லெனின் வீதி அதிமுக அலுவலகத்தில் முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்திசேகா் தலைமையில் அண்ணா உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து, நிா்வாகிகள் ஊா்வலமாக சென்று அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் தலைமையில் அதிமுக நிா்வாகிகள் இருசக்கர வாகனத்தில் ஊா்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

புதிய நீதிக் கட்சி சாா்பில், அதன் மாநிலத் தலைவா் எஸ்.பொன்னுரங்கம் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments