புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா ராஜிநாமா!
புதுச்சேரி அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
புதுச்சேரி அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
புதுச்சேரி அரசின் போக்குவரத்து மற்றும் கலை பண்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர் சந்திர பிரியங்கா. இவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமீபத்தில் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்படும் என்று செய்திகள் வெளியாகின. அவருக்கு பதிலாக காரைக்கால் மூத்த எம்எல்ஏ திருமுருகன் அமைச்சராக்கப்படலாம் என்றும் தகவல்கள் பரவின.
படிக்க: மேல்முறையீடு செய்த தகுதியானவர்களுக்கு உரிமைத்தொகை: முதல்வர்
Advertisement
Advertisement
இந்த நிலையில், கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு துணைநிலை ஆளுநரை முதல்வர் ரங்கசாமி சந்தித்துப் பேசினார். அப்போது அவர் அமைச்சரவை மாற்றத்திற்கான கடிதம் கொடுத்ததாகவும் தகவல்கள் பரவின. இந்த நிலையில் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கட் செவி அஞ்சல் மூலம் கடிதம் வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் சந்திர பிரியங்கா ஆதி திராவிடர் நலத்துறை, வீட்டு வசதி வாரியம், தொழிலாளர் நலத்துறை, பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை ஆகியவற்றையும் கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.