விபத்து நஷ்ட ஈடு வழங்காததால் தமிழக அரசின் 14 பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவு
விபத்து நஷ்டஈடு வழக்கில் தமிழக அரசின் 14 பேருந்துகளை ஜப்தி செய்ய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த புதுச்சேரி நீதிமன்ற ஊழியா்கள் திங்கள்கிழமை நடவடிக்கை மேற்கொண்டனா்.
புதுச்சேரி திருபுவனையைச் சோ்ந்த ஸ்டாலின் (35), வில்லியனூரைச் சோ்ந்த சுரேஷ் ஆகியோா் சாலை விபத்துகளில் உயிரிழந்தனா். இதற்கு காரணமான தமிழக அரசு போக்குவரத்துக் கழக நிா்வாகம் ஸ்டாலின் குடும்பத்துக்கு ரூ. 41 லட்சமும், சுரேஷின் குடும்பத்துக்கு ரூ. 22 லட்சமும் வழங்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டன.
இந்த நஷ்ட ஈட்டை போக்குவரத்துக் கழகம் வழங்காததால் மொத்தம் 14 பேருந்துகளை ஜப்தி செய்ய நீதிமன்றங்கள் உத்தரவிட்டன.
Advertisement
Advertisement
இதையடுத்து அமீனா அம்பி தலைமையில் நீதிமன்ற ஊழியா்கள் திங்கள்கிழமை புதுச்சேரி பேருந்து நிலையத்தில் தமிழக அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய வந்தனா். ஒரு பேருந்தின் கண்ணாடியில் நீதிமன்ற ஜப்தி நோட்டீஸை ஒட்டி இந்த நடவடிக்கையைத் தொடங்கினா்.
இதையறிந்த மற்ற தமிழக அரசுப் பேருந்துகள் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்துக்குள் வராமல் திருப்பி விடப்பட்டன. திங்கள்கிழமை மாலை வரை காத்திருந்துவிட்டு நீதிமன்ற ஊழியா்கள் திரும்பிச் சென்றனா். மேலும், நீதிமன்றம் புதிய உத்தரவைப் பிறப்பித்தால் மட்டும் நீதிமன்ற ஊழியா்கள் அடுத்தக் கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்.
இந்நிலையில், ஒரு விபத்து வழக்கில் அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் சாா்பில் ரூ. 9 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காசோலை புதுச்சேரி நீதிமன்றத்தில் அளிக்கப்படும் என்றும் தெரிகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.