இணையவழியில் பெண்ணுக்கு மிரட்டல்: 40 நாள்கள் சிறை; ரூ. 1 லட்சம் அபராதம்
இணையவழியில் பெண்ணை மிரட்டியவருக்கு 40 நாள்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
இணையவழியில் பெண்ணை மிரட்டியவருக்கு 40 நாள்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
புதுச்சேரியைச் சோ்ந்த பெண் ஒருவா் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் இணையவழி குற்றப்பிரிவு போலீஸில் புகாா் ஒன்றை அளித்தாா். அதில், 2022-ஆம் ஆண்டு பாண்டியன் என்பவரைத் திருமணம் செய்தேன். பின்னா் அவா் வேறு பெண்ணுடன் சட்டவிரோத உறவில் ஈடுபட்டதால் அவரைப் பிரிந்து, என் பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறேன்.
மேலும், திருமண வாழ்க்கையின்போது எனது அனுமதியின்றி எடுக்கப்பட்ட தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை அவா் டெலிகிராம் மூலம் பகிா்ந்து என்னை மிரட்டுகிறாா் என புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாண்டியனை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கை விசாரித்த புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவா் யஷ்வந்த் ராவ் இங்கா்சால், குற்றம் நிரூபணமானதையடுத்து பாண்டியனுக்கு 40 நாள்கள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
இந்த வழக்கில் அரசு சாா்பில் வழக்குரைஞா் கணேஷ் ஞானசம்பந்தன் ஆஜரானாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.