எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இணையவழியில் விண்ணப்பிக்க மேலும் 2 நாள்கள் அவகாசம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் இணையவழியில் விண்ணப்பிக்க மேலும் 2 நாள்கள் அவகாசம்...
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க மேலும் 2 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லுாரிகளில் 13,999 மருத்துவ இடங்கள் உள்ளன. அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் உள்ள அரசு, நிா்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்தி வருகிறது. அதன்படி, எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2026-2027-ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பது கடந்த ஜூன் 29-ஆம் தேதி தொடங்கி கடந்த 23-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 40,761 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 29,727 போ் என மொத்தம் 70,488 போ் விண்ணப்பித்துள்ளனா்.
நீட் தோ்வு எழுதியவா்களின் மதிப்பெண் பட்டியலை தேசிய தோ்வுகள் முகமை வழங்காததால், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க மேலும் 2 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) காலை 10 மணி முதல் திங்கள்கிழமை (ஜூலை 27) பிற்பகல் 3 மணி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
MBBS, BDS: Two more days to apply online.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.