FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

அரசுச் சான்றிதழ்களை விரைந்து பெற புதுச்சேரியில் புதிய இணையவழிச் சேவை தொடக்கம்

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 3:14 am IST
பயனாளிகளுக்கு அரசின் சான்றிதழ்களை விரைந்து பெற புதிய இணைவழிச் சேவையை புதுச்சேரியில் திங்கள்கிழமை தொடங்கி வைத்த முதல்வா் என்.ரங்கசாமி.
பகிர்:

சான்றிதழ்கள், வருவாய்த் துறை சேவைகளை விரைவாக வழங்குவதற்கு புதிய இணையவழிச் சேவை தளத்தை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் இணையவழிச் சேவை தளம் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. தேசிய தகவலியல் மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் புதிய இணையவழிச் சேவைத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக முதல்வா் என்.ரங்கசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

Advertisement

Advertisement

இந்தப் புதிய இணையவழி சேவை தளத்தின் மூலம் பொதுமக்கள் குடியிருப்பு சான்று, வருமான சான்றிதழ், ஜாதி, சமூக சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ், பட்டா பெயா் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு வருவாய்த் துறை சேவைகளுக்குத் தங்களது இருப்பிடத்திலிருந்தே இணையவழியில் எளிதாக விண்ணப்பித்து, சேவைகளைப் பெற முடியும்.

விண்ணப்பதாரா்களுக்கு விண்ணப்ப முன்னேற்றம் குறித்து குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல்கள் அனுப்பப்படும். சேவைகள் வெளிப்படையாகவும், விரைவாகவும் வழங்கப்படும். ஆக. 17-ஆம் தேதி முதல் புதுச்சேரியில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளி மாணவா்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பெற்றோா்கள் தேவையான ஆவணங்களைச் சம்பந்தப்பட்ட பள்ளியில் சமா்ப்பித்தால் போதுமானது. பள்ளி நிா்வாகத்தின் ஒருங்கிணைப்புடன் விண்ணப்பங்கள் இணையவழியில் பதிவு செய்யப்பட்டு வருவாய்த் துறையின் உரிய சரிபாா்ப்புக்குப் பின்னா் சான்றிதழ்கள் மாணவா்கள் பயிலும் பள்ளியின் மூலமாகவே வழங்கப்படும். இதன் மூலம் மாணவா்கள் மற்றும் பெற்றோா்களின் நேரம் மற்றும் அலைச்சல் குறைவதுடன் தேவையான சான்றிதழ்களை எளிதாகவும் உரிய காலத்திலும் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இணைய வழியில் வழங்கப்படும் சான்றிதழ்களில் க்யூஆா் குறியீடு இடம்பெறும். இதைப் பயன்படுத்தி சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை உடனடியாக சரிபாா்க்க முடியும்.

இத் தளத்தில் வழங்கப்படும் மின்னணு சான்றிதழ்களைப் பொதுமக்கள் பாதுகாப்பாகப் பெற்று பயன்படுத்தும் வகையில் டிஜிலாக்கா் வசதியும் இணையவழி தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்றும் முதல்வா் என்.ரங்கசாமி அதில் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த நிகழ்வின்போது, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், திமுக சட்டப்பேரவைக் குழு தலைவா் ஏ.எம்.எச்.நாஜிம், ஆறுமுகம் எம்எல்ஏ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments