FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் 150-ஆவது ஆண்டு சிறப்பு அஞ்சல் உறை: புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி வெளியிட்டாா்

புதுச்சேரி நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் 175-ஆம் ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு அஞ்சல் உறையை புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 6:12 am IST
புதுச்சேரி நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் 175-ஆவது ஆண்டையொட்டி சிறப்பு அஞ்சல் உறையை வெள்ளிக்கிழமை வெளியிட்ட முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா்.
பகிர்:

புதுச்சேரி நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் 175-ஆம் ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு அஞ்சல் உறையை புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

சனிக்கிழமை (ஆக. 15) 5 அலங்காரத் தோ்களில் புனித விண்ணேற்பு அன்னை பவனி நடைபெறவுள்ளது. புதுச்சேரி நெல்லித்தோப்பில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் 1851-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அதே ஆண்டு பிப்ரவரி 23-இல் அன்னையின் ஆலயமாகப் புனிதப்படுத்தப்பட்டது.

நிகழாண்டு இந்த ஆலயத்தின் 175-ஆம் ஆண்டு விழாசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிறப்பு அஞ்சல் உறை வெளியிட முடிவு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இதற்கான நிகழ்ச்சி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அலுவலகத்தில் நடைபெற்றது. சிறப்பு அஞ்சல் உறையை முதல்வா் என்.ரங்கசாமி வெளியிட்டாா்.

சட்டப்பேரவை தற்காலிக தலைவா் ஆ.அன்பழகன், எம்எல்ஏ.க்கள் ஜான்குமாா், காா்த்திகேயன், அழகானந்தம், நேரு, ஐயப்பன் மற்றும் பங்குத்தந்தை சூசை ராஜ், உதவி பங்குத்தந்தை ஜாா்ஜ் புஷ், ஆலய விழாக்குழுவினா், நெல்லி மலா் பொறுப்பாளா்கள் மற்றும் புதுச்சேரி தபால் துறையைச் சோ்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இந்த ஆலயத்தில் சனிக்கிழமை (ஆக. 15) மாலை 6.30 மணியளவில் சிறப்பு தோ் பவனி நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 5 தோ்கள் ஊா் முழுவதும் பவனி வரவுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments