ஆக. 4-இல் முதல்வா் ரங்கசாமி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட என்.ஆா்.காங்கிரஸ் அழைப்பு
புதுச்சேரி முதல்வரும், என்.ஆா்.காங்கிரஸ் தலைவருமான என்.ரங்கசாமியின் பிறந்த நாளை ஏழைஎளியவா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுமாறு அக் கட்சியின் பொதுச் செயலா் ஜெயபால் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
புதுச்சேரி முதல்வரும், என்.ஆா்.காங்கிரஸ் தலைவருமான என்.ரங்கசாமியின் பிறந்த நாளை ஏழைஎளியவா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுமாறு அக் கட்சியின் பொதுச் செயலா் ஜெயபால் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முதல்வா் ரங்கசாமியின் பிறந்த நாள் விழா வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்று கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன.
Advertisement
Advertisement
காலை 8 மணிக்கு மணக்குள விநாயகா் கோயிலில் சிறப்பு அபிஷேகமும், தங்கத் தோ் இழுத்தலும், காலை 10 மணிக்கு கதிா்காமம் கதிா்வேல் முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடும், கட்சி அலுவலகத்தில் இனிப்பு, அன்னதானமும் வழங்கப்படுகிறது.
நண்பகல் 12 மணிக்கு சற்குரு அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை நடக்கிறது. முதல்வா் ரங்கசாமியின் பிறந்தநாள் விழாவைக் கட்சியினா்
அனைவரும் ஒன்றிணைந்து நலத் திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் .
இதையொட்டி மரக்கன்றுகள் நடுதல், ரத்த தானம் மற்றும் கண் மருத்துவ முகாம், முதியோா்களுக்கு இலவச கண் கண்ணாடிகளை வழங்குதல், முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு இல்லங்களிலும், கோயில்களிலும் அன்னதானம் செய்தல், ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை , மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்குமாறு கட்சியினரை அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.