FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை!

புதுச்சேரி 16வது சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை பற்றி..

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 4:40 pm IST
அவைத்தலைவர் அன்பழகன்
பகிர்:

புதுச்சேரி சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தற்காலிக அவைத்தலைவர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தற்காலிக அவைத்தலைவர் அன்பழகன்,

புதுச்சேரி 16வது சட்டப்பேரவைக்கு புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்களுக்கு நாளை சிவகவி உணவகத்தில் அறிமுகம், புத்தாக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்து பேசுகிறார். மேலும், எதிர்க்கட்சித்தலைவர் நாஜிம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்எல்ஏ இளங்கோ, சார்பு செயலாளர் ஜான்சி, முன்னாள் பட்ஜெட் அதிகாரி பொன்னுசாமி, சட்டப்பேரவை செயலர் தயாளன் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர் என்று கூறினார்.

Advertisement

Advertisement

மேலும், தமிழ்த்தாய் வாழ்த்து சட்டப்பேரவையில் முதலில் பாட வேண்டும் என நேரு எம்எல்ஏ கவன ஈர்ப்பு தீர்மானமும், எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் ஒரு கடிதமும் அளித்துள்ளனர். தமிழ்த்தாய் வாழ்த்துக்காக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை. மத்திய அரசின் ஆணை, சுற்றறிக்கை, குறிப்பாணை வழிகாட்டுதல்கள் உள்ளது.

ஆனால், முதல்வர் தமிழ் மீது உள்ள பற்றால், தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். சுதந்திர தின விழாவின்போதும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. எனவே, சட்டப்பேரவையிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதற்கான நடவடிக்கையை முதல்வர் மேற்கொள்வார்.

அவைத்தலைவர் தேர்தலை நடத்த வேண்டும் என கடந்த ஜூன் 24 ஆம் தேதி குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பினோம். அதில் ஜூலை 2 ஆம் தேதி தேர்தலை நடத்த அனுமதிக்கக் கோரியிருந்தோம். அதற்கு குடியரசுத் தலைவரிடம் இருந்து பதில் வரவில்லை. அனுமதி தரும்படி வலியுறுத்த முடியாது.

நிரந்தர அவைத்தலைவரைத் தேர்வு செய்யும் வரை தற்காலிக அவைத்தலைவருக்கு நிரந்தர அவைத்தலைவருக்கு உரிய அனைத்து அதிகாரங்களும் உள்ளது. திமுகவின் சட்டமன்ற குழு தலைவராக நாஜிம் தேர்வு செய்வதற்கான கடிதத்தைக் கட்சியின் தலைவர் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் 2வது பெரிய கட்சியாக திமுக உள்ளது. எனவே சட்டப்பேரவை கூட்டத்தில் அவர் எதிர்கட்சி தலைவராக அறிவிக்கப்படுவார் என அன்பழகன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments