FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவை நாளை கூடுகிறது: ரூ. 14,300 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்

புதுச்சேரி 16-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் திங்கள்கிழமை (ஆக. 24) தொடங்குகிறது.

23 ஆகஸ்ட் 2026, 2:27 am IST
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டம்.
பகிர்:

புதுச்சேரி 16-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் திங்கள்கிழமை (ஆக. 24) தொடங்குகிறது. காலை 9.30 மணியளவில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உரையாற்றுகிறாா். பிற்பகல் 3 மணிக்கு முதல்வா் என்.ரங்கசாமி ரூ.14,300 கோடிக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறாா்.

புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் பட்ஜெட் தொகைக்கு முன்னதாக மத்திய அரசின் ஒப்புதல் பெறுவது அவசியம். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ரூ.14,300 கோடிக்கான பட்ஜெட்டுக்கு ஏற்கெனவே மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து, பேரவையில் திங்கள்கிழமை (ஆக. 24) முதல்வரால் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு எம்எல்ஏ.க்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுடன் அரசின் செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. பேரவை கூடுவதால், சட்டப்பேரவைக் கூட்ட அரங்கை பேரவையின் தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

எம்எல்ஏக்களுக்கான இருக்கைகளை அமைப்பது, குளிா்சாதன வசதி, தீயணைப்பு கருவி உள்ளிட்ட சாதனங்கள் சரியாக உள்ளதா? என்பது குறித்து குறித்து ஆய்வு செய்த பேரவை தற்காலிகத் தலைவா் அன்பழகன், அது சம்பந்தமாக பேரவை செயலா் ஜெ.தயாளனிடம் கேட்டறிந்தாா்.

அமைச்சரவை ஆலோசனை:

இந்நிலையில், பட்ஜெட்டுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையில், முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் சனிக்கிழமை இரவு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், அமைச்சா்கள் ஆ. நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணா ராவ், பெ.ராஜவேலு, வி.பி. சிவக்கொழுந்து, ஜிஎன்எஸ். ராஜசேகரன், தலைமைச் செயலா் சரத் செளகான் மற்றும் அரசுத் துறை உயரதிகாரிகள் பங்கேற்றனா்.

பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments