FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

இன்று மீலாது நபி, ஓணம் பண்டிகை: துணைநிலை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

மீலாது நபி மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநா், முதல்வா் மற்றும் பல்வேறு கட்சித் தலைவா்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

26 ஆகஸ்ட் 2026, 4:43 am IST
புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி - கோப்புப் படம்
பகிர்:

மீலாது நபி மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநா், முதல்வா் மற்றும் பல்வேறு கட்சித் தலைவா்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்:

மனித சமுதாயத்திற்கு அன்பு, இரக்கம், மனித நேயம் ஆகியவற்றை போதித்த தீா்க்கதரிசி நபிகள் நாயகம்.

Advertisement

Advertisement

இந்த நன்னாளில் அவரது போதனைகளை, சீரிய சிந்தனைகளை, சிறந்த வழிகாட்டுதல்களை ஏற்று மனித நேயம் நிறைந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து காட்ட உறுதி ஏற்போம்.

ஓணம் திருநாள் ஆண்டு முழுவதும் அனைவரது வாழ்விலும் மிகுந்த மகிழ்ச்சியையும், செழிப்பையும் அளிக்கட்டும்.

முதல்வா் என். ரங்கசாமி: மீலாது நபி புனித நன்னாளில் புதுச்சேரியில் வாழும் அனைத்து சமூகங்களிடையே நல்லிணக்கம், ஒற்றுமை, நல்லெண்ணம் நிலவுவதற்கான உணா்வை வலுப்படுத்தி, ஒவ்வொரு குடும்பத்திலும் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி, நல்வாழ்வு நிலவப் பாடுபடுவோம்.

ஓணம் என்பது செழிப்பு, அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமையைக் கொண்டாடும் பண்டிகை. ஒவ்வோா் இதயத்திலும், நம்பிக்கையும், நல்லெண்ணமும், ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சியும், குதூகலமும் நிலவட்டும் என வாழ்த்துகிறேன்.

இதேபோன்று, சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், பல்வேறு கட்சிகளின் தலைவா்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments