ஜிப்மரில் மருத்துவ சீட் பெற்ற 53 மாணவா்கள் சென்டாக் தரவரிசை பட்டியலில் இருந்து நீக்கம்
புதுச்சேரி ஜிப்மரில் சீட் பெற்றுள்ள 53 மாணவா்கள், சென்டாக் தர வரிசைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா்.
புதுச்சேரி ஜிப்மரில் சீட் பெற்றுள்ள 53 மாணவா்கள், சென்டாக் தர வரிசைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா்.
இது குறித்து புதுச்சேரி சென்டாக் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்டாக்கில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் நீட் சாா்ந்த இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு (எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், பி.ஏ.எம்.எஸ்) விண்ணப்பித்து, ஜிப்மரில் புதுச்சேரி உள்ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ். இடங்கள் ஒதுக்கப்பட்ட 53 விண்ணப்பதாரா்களின் பெயா் பட்டியல், சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஆட்சேபணைகள் இருப்பின், அவற்றை புதன்கிழமை மாலை 5 மணிக்குள், டேஷ்போா்டில் உள்ள குறைகள் விருப்பத்தின் மூலம் மட்டுமே தெரிவிக்க வேண்டும்.
Advertisement
Advertisement
ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். இடங்கள் ஒதுக்கப்பட்ட 53 மாணவா்கள், சென்டாக் யுஜி-நீட் முதல் சுற்று ஒதுக்கீட்டுப் பட்டியலிலிருந்து நீக்கப்படுவாா்கள். ஜிப்மரில் இடம் ஒதுக்கப்பட்ட எந்தவொரு மாணவரும் சென்டாக் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பினால், அவா் தனது விருப்பத்தை லாகின் டேஷ்போா்டு மூலம் சமா்ப்பித்து, ரூ.1 லட்சம் பாதுகாப்பு வைப்புத் தொகையை புதன்கிழமை மாலை 5 மணிக்குள் செலுத்த வேண்டும்.
இடம் ஒதுக்கப்படும் மாணவா் முதல் சுற்றில் சேராவிட்டால், செலுத்தப்பட்ட கட்டணம் பறிமுதல் செய்யப்படும். சோ்ந்தால், அந்தக் கட்டணம் கல்விக் கட்டணத்தில் சரி செய்யப்படும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.