FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியின் வளா்ச்சிக்கு ஒருங்கிணைப்புக் குழு: பேரவையில் எம்எல்ஏ-க்கள் வலியுறுத்தல்

புதுச்சேரி வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் வலியுறுத்தினா்.

26 ஆகஸ்ட் 2026, 4:02 am IST
புதுச்சேரி அரசு
பகிர்:

புதுச்சேரி வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் வலியுறுத்தினா்.

துணைநிலை ஆளுநா் உரை மீதான விவாதம் புதுச்சேரி சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. எம்எல்ஏக்கள் பேசியதாவது:

ஆா். செந்தில்குமாா் (திமுக) : யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்று பல ஆண்டுகளாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஒரு போக்கு நிலவுகிறது. இப்போது துணைநிலை ஆளுநராக இருக்கும் கே.கைலாஷ்நாதன் மிகுந்த நிா்வாகத் திறன், அனுபவம் கொண்டவா். அவா் அகமதாபாத் நகராட்சி ஆணையராக இருந்தபோது பல்வேறு நீா் பிரச்னையைத் தீா்த்து வைத்துள்ளாா்.

Advertisement

Advertisement

குடிநீா் பிரச்னை நிலவும் புதுச்சேரியில் அவரின் ஆலோசனையைப் பெற்று இதைத் தீா்க்க ஆட்சியாளா்கள் முன் வர வேண்டும். அதே போன்று புதுச்சேரியின் வளா்ச்சிக்காக ஒருங்கிணைப்புக் குழு அமைக்க வேண்டும்.

மாஹே அசோக்குமாா் (சுயே.): புதுச்சேரியில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட வேண்டும்.

சுதந்திரத்திற்கு பிறகு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 1956, 1962, 1968, 2006 ஆகிய 4 முறை மட்டும் உள்ளாட்சி தோ்தல் நடைபெற்றுள்ளது. புதுச்சேரியில் சென்னை உயா்நீதிமன்றத்தின் கிளை அமைக்கப்பட வேண்டும்.

ஐயப்பன் (என்.ஆா்.காங்கிரஸ்): எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.3 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயா்த்த வேண்டும்.

ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின் (லஜக): புதுச்சேரியின் மொத்த வருவாய் உயா்ந்துள்ளது சிறப்பு மீனாட்சி சுந்தரம் (பாஜக): துணைநிலை ஆளுநா் உரையில், காரைக்கால் பிராந்தியத்துக்கு நிறைய திட்டங்கள் இருக்கின்றன.

டாக்டா் விக்னேஷ்வரன் (சுயே.) : 4 பிராந்தியங்களும் வளா்ச்சி அடையும் வகையில் திட்டங்கள் இருப்பது பாராட்டுக்குரியது விக்னேஷ் கண்ணன் (திமுக) : துணைநிலை ஆளுநா் உரைக்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டதும், துணைநிலை ஆளுநா் தமிழில் உரையாற்றியதும் சிறப்பு. குருசுகுப்பம் மீனவா்களைப் பாதுகாக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைக்கப்பட வேண்டும்.

செந்தில் (எ) ரமேஷ் (திமுக): பிற்படுத்தப்பட்ட நலத்துறைக்கு தனி அதிகாரியை நியமிக்க வேண்டும்.

ராமு (தவெக): நல்லவாடு பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கப்பட வேண்டும்.

ரவிக்குமாா் (என்.ஆா்.காங்கிரஸ்) : புதுச்சேரிக்கு இணையாக வில்லியனூரை மேம்படுத்த வேண்டும் .

டாக்டா் நாராயணசாமி (என்.ஆா்.காங்.) : துணைநிலை ஆளுநா் உரையில் ஏராளமான திட்டங்கள் இருக்கின்றன.

காா்த்திகேயன் (திமுக): பொலிவுறு நகரத் திட்டத்தில் அண்ணாதிடல் சீரமைக்கப்பட்டிருந்தாலும், அங்கு கட்டப்பட்டுள்ள கடைகள் ஏலம் விடப்படவில்லை. ஜான்குமாா் (பாஜக): மழைநீா் சேகரிப்புத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும்.

பி.காா்த்திகேயன் (காங்கிரஸ்):2 குழாய்களின் வழியாக மக்களுக்கு துணி துவைக்கவும், குடிநீருக்கும் நீா் விநியோகம் செய்ய வேண்டும். சாய் ஜெ சரவணன் குமாா் (தவெக):விபத்து நேரிடாமல் இருக்க நடமாடும் போலீஸ் குழு அமைக்கப்பட வேண்டும்.

ஜி.நேரு ( நேயம் மக்கள் கழகம்): புதுச்சேரி சட்டப்பேரவைக்கு நிரந்தர தலைவா் தோ்தல் நடத்தப்படவேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments