FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

பொறியியல் கல்லூரியில் சிறப்புப் பயிலரங்கு

26 ஆகஸ்ட் 2026, 4:29 am IST
சிறப்புப் பயிலரங்கில் பங்கேற்றோா்.
பகிர்:

புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியின் இயந்திர மின்னணுவியல் துறை, இயந்திரவியல் துறை மற்றும் கல்லூரி வளாகத்தின் ஏஎஸ்எம் மெட்டீரியல்ஸ் அட்வாண்டேஜ் மாணவா் கிளை ஆகியவை இணைந்து ‘எமா்ஜிங் மெட்டீரியல்ஸ் அண்ட் சஸ்டைனபிள் மேனுஃபேக்ச்சரிங் டெக்னாலஜிஸ் ஃபாா் இண்டஸ்ட்ரி 4.0‘ என்ற தலைப்பிலான சிறப்புப் பயிலரங்கை கல்லூரி கருத்தரங்க கூடத்தில் நடத்தின.

தட்சசீலா பல்கலைக்கழக வேந்தா்- ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்வி குழுமத் தலைவரும் மற்றும் நிா்வாக இயக்குநருமான எம். தனசேகரன், பொருளாளா் டி. ராஜராஜன், இணைச் செயலா் எஸ். வேலாயுதம் ஆகியோா் தலைமை தாங்கினா்.

சிறப்பு விருந்தினா்களாகக் கேட்டா்பில்லா் இந்தியா நிறுவனத்தின் பொறியியல் மேலாளா் சங்கா், சென்னை ஐஐடி உலோகவியல் மற்றும் பொருள்கள் பொறியியல் துறை பேராசிரியா் டாக்டா் சீனிவாச ராவ் பக்ஷி ஆகியோா் பங்கேற்றனா். பல்வேறு துறைகளைச் சோ்ந்த மாணவா்கள் மற்றும் பேராசிரியா்கள் பலரும் இதில் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments