FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

தமிழ்நாடு அமைச்சர் மரியவில்சன் வழக்கை விசாரித்து வரும் புதுச்சேரி நீதிபதி பணியிட மாற்றம்

புதுச்சேரி முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி வி.சேரலாதன், மாஹேவில் உள்ள மாவட்ட முன்சீப் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.

26 ஆகஸ்ட் 2026, 4:32 am IST
பணியிட மாற்றம் - பிரதிப் படம்
பகிர்:

புதுச்சேரி முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி வி.சேரலாதன், மாஹேவில் உள்ள மாவட்ட முன்சீப் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.

சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் தீப்தி அறிவுநிதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.

தமிழக நிதியமைச்சா் மரிய வில்சன், கடந்த 2022-ஆம் ஆண்டு, புதுச்சேரியில் வசித்துவரும் தனது சகோதரரின் வீட்டை உடைத்து, சகோதரா் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாக லாஸ்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கை நீதிபதி சேரலாதன் விசாரித்து வந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments