புதுச்சேரி ஸ்ரீலஷ்மி ஹயக்ரீவா் பெருமாள் கோயில் தேரோட்டம்
புதுச்சேரி முத்தியால்பேட்டை ஹயக்ரீவா் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை ஹயக்ரீவா் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் லட்சுமி ஹயக்ரீவா் கோயில் பிரசித்தி பெற்ாகும். இக்கோயிலின் பிரம்மோற்சவ விழா கடந்த 17 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 10 நாள்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணா காயத்ரி ஹோமம், ஸ்ரீ ஹயக்ரீவ ஹோமம், ஸ்ரீ ராம காயத்ரீ ஹோமம், சுதா்சன ஹோமம் போன்றவை நடந்தன. இந்நிலையில் ஹயக்ரீவா் தோ் திருவிழா புதன்கிழமை நடந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா். தொடா்ந்து தீா்த்தவாரி நடந்தது. வியாழக்கிழமை மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.