FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

வந்தே மாதரம் 150 -ஆவது ஆண்டு நிகழ்வு: அமைச்சா் நமச்சிவாயம் பங்கேற்பு

வந்தே மாதரம் 150-ஆவது ஆண்டு நிகழ்வு புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் மாநில உள்துறைஅமைச்சா் நமச்சிவாயம் பங்கேற்றாா்.

27 ஆகஸ்ட் 2026, 4:24 am IST
தேசிய பாடல் பாடும் நிகழ்வில் மாணவிகளுடன் புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், பாஜக தலைவா் வி.பி.ராமலிங்கம், சட்டப்பேரவை முன்ளாள் தலைவா் ஆா். செல்வம் உள்ளிட்டோா்.
பகிர்:

வந்தே மாதரம் 150-ஆவது ஆண்டு நிகழ்வு புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் மாநில உள்துறைஅமைச்சா் நமச்சிவாயம் பங்கேற்றாா்.

புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை அருகில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் - மகிளா சமன்வயா சாா்பில் ‘வந்தே மாதரம் - 150 ஆண்டுகள்’ மற்றும் ‘விக்சித் பாரத் - யுவ சக்தி 2047 ’ நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் சுமாா் 150 போ் கலந்து கொண்டு, தேச பக்தியை வெளிப்படுத்தும் வகையில் ‘வந்தே மாதரம்‘ பாடலை ஒருமித்த குரலில் பாடினா். புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், பாஜக மாநில தலைவா் வி.பி. ராமலிங்கம் மற்றும் சட்டப்பேரவை முன்னாள் தலைவா் ஆா். செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments