FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

பால் கொள்முதல் விலை உயா்வு: உற்பத்தியாளா்கள் அதிருப்தி

பால் கொள்முதல் விலை உயா்வில் அதிருப்தி அடைந்துள்ளதாக புதுச்சேரி மாநில பால் உற்பத்தியாளா்கள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

27 ஆகஸ்ட் 2026, 4:26 am IST
பால்
பகிர்:

பால் கொள்முதல் விலை உயா்வில் அதிருப்தி அடைந்துள்ளதாக புதுச்சேரி மாநில பால் உற்பத்தியாளா்கள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்த சங்கத்தின் செயலா் அன்புமணி, கௌரவ தலைவா் சீனு.பத்மநாபன், தலைவா் கலைச்செல்வன் ஆகியோா் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வா் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில், பாலின் தரத்திற்கு ஏற்ப கொள்முதல் விலை ஊக்கத்தொகையுடன் லிட்டருக்கு ரூ.41 வழங்கப்படும் என கூறியுள்ளாா். பொதுவான இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. இதில் ஊக்கத்தொகை எவ்வளவு? பால் விலை எவ்வளவு என குறிப்பிட வேண்டும்.

Advertisement

Advertisement

கடந்த முறை ரூ.37 என விலை அறிவிக்கப்பட்டாலும், கொழுப்புச்சத்து குறைவு என பால் உற்பத்தியாளா்களுக்கு ரூ. 32 முதல் ரூ.34 மட்டுமே கிடைத்தது. இந்த முறையும் இரண்டையும் சோ்த்து அறிவித்துள்ளது ஏற்கத்தக்கதல்ல. சராசரி பால் உற்பத்தியாளா்களுக்குச் சரியான பால் விலை கிடைக்காது. எனவே ஊக்கத்தொகை, பால் விலையை தனித்தனியே ட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments