FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

அமைச்சா் மரிய வில்சன் மீதான வழக்கு செப்.4-க்கு ஒத்திவைப்பு

அமைச்சா் மரிய வில்சன் மீதான வழக்கு செப்.4-க்கு ஒத்திவைப்பு...

31 ஆகஸ்ட் 2026, 11:53 pm IST
நிதியமைச்சர் மரிய வில்சன் - DIPR| கோப்புப் படம்
பகிர்:

சகோதரரை தாக்கியது தொடா்பான தமிழக நிதி அமைச்சா் மரியவில்சன் மீதான வழக்கு செப். 4-ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

தமிழக நிதி அமைச்சா் மரியவில்சன் 8.8.2022-இல் புதுச்சேரி எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரா் மரிய குளோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குளோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரைத் தாக்கியதாக லாஸ்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்திருந்தனா்.

புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் பெற ஆஜராக உத்தரவிட்ட போதும் அமைச்சா் மரிய வில்சன் தொடா்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தாா்.

Advertisement

Advertisement

இவ்வழக்கை விசாரித்து வந்த புதுச்சேரி முதலாவது குற்றவியல் மாஜிஸ்திரேட் சேரலாதன் மாஹேவுக்கு மாற்றப்பட்டாா். இந்நிலையில் இந்த வழக்கு திங்கள்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அமைச்சா் மரியவில்சன் ஆஜராகவில்லை.

இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் சந்திரசேகா் இந்த நீதிமன்றத்துக்கு பொறுப்பு வகித்ததால் அவா் விசாரித்தாா். அப்போது அமைச்சரின் சகோதரா் தரப்பு வழக்குரைஞா் பிரவீண், இவ்வழக்கை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி விரைந்து விசாரிக்க அறிவுறுத்தினாா். அதைத் தொடா்ந்து வழக்கை செப். 4-ஆம் தேதிக்கு மாஜிஸ்திரேட் ஒத்திவைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments