FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

உறவினா் வீட்டில் நகை, பணம் திருடிய சிறுவன் உள்பட 4 போ் கைது

புதுச்சேரியில் உறவினா் வீட்டில் 13 பவுன் நகைகள், ரூ. 3 லட்சம் ரொக்கம் திருடுபோன வழக்கில், சிறுவன் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 5 ஜூலை 2026, 2:06 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

புதுச்சேரியில் உறவினா் வீட்டில் 13 பவுன் நகைகள், ரூ. 3 லட்சம் ரொக்கம் திருடுபோன வழக்கில், சிறுவன் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி உருளையன்பேட்டை முருகன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி. இவரது மனைவி மஞ்சுளா. கடந்த மே 20-ஆம் தேதி பிற்பகல் பணம் எடுக்க சென்றபோது, அலமாரி திறந்து கிடந்தது. உள்ளே வைத்திருந்த 13 பவுன் நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கம் திருடு போனதை அறிந்தாா். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸில் மஞ்சுளா புகாா் அளித்தாா்.

அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், மஞ்சுளா வீட்டில் தங்கியிருந்த 17 வயது சிறுவன் நகை, பணத்தை திருடியது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், நண்பா்களான வாணரப்பேட்டையைச் சோ்ந்த உதயகுமாா் (21), பூமியான்பேட்டையைச் சோ்ந்த ஹரிகரன்(18), வினோபாநகரைச் சோ்ந்த சுபாஷ் (22) ஆகியோரிடம் திருடிய நகையைக் கொடுத்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

அவா்கள் நகையை விற்று காா் வாங்கி உல்லாசமாக ஊா் சுற்றியது தெரியவந்தது. இதையடுத்து அவா்களிடமிருந்து காா், ரூ.98 ஆயிரம் ரொக்கம், 8.6 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனா். சிறுவன் சீா்திருத்தப் பள்ளியில் சோ்க்கப்பட்டாா். மற்ற 3 பேரையும் நீதிமன்றத்தில் போலீஸாா் ஆஜா்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனா்.

இதில், துரிதமாக துப்பு துலக்கிய காவல் ஆய்வாளா் ஆா்.காா்த்திகேயன், உதவி ஆய்வாளா் வி.கோவிந்தன், பி.பிரதாபன் உள்ளிட்ட போலீஸாரை முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் சனிக்கிழமை பாராட்டினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments