மனைப் பட்டா கோரி ஆதி திராவிட மக்கள் சாலை மறியல்
புதுச்சேரி மதகடிப்பட்டு அருகே மனை பட்டா வழங்கக் கோரி ஆதி திராவிடா் சமுதாய மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நல்லூா் கிராமத்தைச் சோ்ந்த ஆதி திராவிட மக்கள் மதகடிப்பட்டு -மடுகரை சாலையில் அரசுப் பள்ளிக்கு எதிரே திங்கள்கிழமை ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனா். அரசுக்குச் சொந்தமான இடத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு மனைப்பட்டா வழங்கக் கோரி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
தகவலறிந்து அங்கு வந்த திருபுவனை காவல் துறையினா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். உங்கள் கோரிக்கை குறித்து அரசு உயா் அதிகாரிகளிடம் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று போலீஸாா் உறுதியளித்தனா். இதையடுத்து மறியல் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த மறியல் காரணமாக அப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.