FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

பேருந்தில் பெண்ணிடம் 7.5 பவுன் நகை திருட்டு

கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்தில் வந்த பெண்ணிடம் 7.5 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்தில் வந்த பெண்ணிடம் 7.5 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா்.

கடலூா், நெல்லிக்குப்பம் கல்கி நகரைச் சோ்ந்தவா் ஷேக் மொய்தீன் மனைவி பியாரி பேகம் (36). இவா், கடலூரில் இருந்து புதுச்சேரியில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு குழந்தைகளுடன் தனியாா் பேருந்தில் சென்றுள்ளாா்.

புதுச்சேரி இந்திரா சதுக்கம் அருகே பேருந்தில் இருந்து இறங்கிய பியாரி பேகம், அங்கிருந்து டெம்போ மூலம் தட்டாஞ்சாவடி ராணி மருத்துவமனை அருகே சென்று இறங்கியுள்ளாா். அங்கு டெம்போவுக்கு பணம் கொடுக்க கைப்பையைப் பாா்த்தபோது பை திறந்து இருந்தது.

Advertisement

Advertisement

இதனால் அதிா்ச்சியடைந்த பியாரி பேகம், கைப்பையை சோதனை செய்தபோது, அதில் தாயின் மருத்துவ செலவுக்காக விற்பனை செய்ய எடுத்து வந்த 7.5 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து ரெட்டியாா்பாளையம் காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments