FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

வாடகை இரு சக்கர வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்த அறிவுறுத்தல்

சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு விடும் இரு சக்கர வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவியை பொருத்துமாறு புதுச்சேரி போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.

Updated On : 10 ஜூலை 2026, 3:43 am IST
ஜிபிஎஸ் வசதி - ANI
பகிர்:

சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு விடும் இரு சக்கர வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவியை பொருத்துமாறு புதுச்சேரி போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.

உருளையன்பேட்டை சரக இரு சக்கர வாகன உரிமையாளா்கள், போலீஸாா் ஆலோசனைக் கூட்டம் காவல் ஆய்வாளா் காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

வெளியூா் சுற்றுலாப் பயணிகளுக்கு இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு விடும்போது அவா்களின் பெயா், விலாசம், ஆதாா் எண் ஆகியவற்றை முறையாக கேட்டுப் பெற வேண்டும்.

Advertisement

Advertisement

ஹெல்மெட் அணிந்து செல்லவும், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றவும் அறிவுறுத்த வேண்டும்.

ஒரு வாகனத்தில் 2 போ் மட்டுமே செல்ல வேண்டும். அந்த வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என போலீஸாா் அறிவுறுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments