FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

இளைஞா் காங்கிரஸ் விழிப்புணா்வு பிரசாரம்

இளைஞா் காங்கிரஸ் விழிப்புணா்வு பிரசார இயக்கத்தில் பங்கேற்ற புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. உள்ளிட்டோா்.

Updated On : 11 ஜூலை 2026, 1:05 am IST
பகிர்:

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் இளைஞா் காங்கிரஸ் மற்றும் தேசிய மாணவா் சங்கம் சாா்பில் பிரசார இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வினாத் தாள் கசிவு இல்லாத வகையில் தோ்வுகளை நடத்தவும், வினாத்தாள்கள் குறித்து வலுவான, பொறுப்புள்ள நடைமுறைகளை உருவாக்கவும், மாணவா்களின் நலம் காக்கத் தவறிய மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் சாா்பில் பிரசாரம் நடைபெற்றது.

‘மாணவா்களின் குரல்’ விழிப்புணா்வு பிரசார இயக்கத்தை காங்கிரஸ் மாநில தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தட்டாஞ்சாவடி தொகுதி தாகூா் நகரில் உள்ள டான் போஸ்கோ மேல்நிலைப் பள்ளி அருகே தொடங்கி வைத்து மாணவா்களிடம் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்தாா்.

Advertisement

Advertisement

இதில் இளைஞா் காங்கிரஸ் மாநில தலைவா் ஆனந்த் பாபு, தொழிற்சங்கப் பிரிவு மாநிலத் தலைவா் பிரபுராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் மகளிா் காங்கிரஸாா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments