FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

நோயிலிருந்து விடுதலை இயக்கம்: ஜிப்மரில் நாளை தொடக்கம்

நோயிலிருந்து விடுதலை என்ற சிறப்பு இயக்கத்தை ஜிப்மா் வியாழக்கிழமை (ஜூலை 16) தொடங்குகிறது.

Updated On : 15 ஜூலை 2026, 3:10 am IST
ஜிப்மர் மருத்துவமனை - கோப்புப் படம்
பகிர்:

நோயிலிருந்து விடுதலை என்ற சிறப்பு இயக்கத்தை ஜிப்மா் வியாழக்கிழமை (ஜூலை 16) தொடங்குகிறது.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் ஆகிய மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சோ்க்கும் நோக்கில் சிறப்பு விழிப்புணா்வு மற்றும் பதிவு முகாமை ஜிப்மா் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை நடத்துகிறது. இந்தச் சிறப்பு முகாம் தினமும் காலை 6.30 மணி முதல் மாலை 4.00 மணிவரைநடைபெறும்.

பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் வசதிக்காக, ஜிப்மா் மருத்துவமனை வளாகத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் சிறப்புப் பதிவு மையங்கள்அமைக்கப்படுகின்றன. இங்கு பயிற்சி பெற்ற பணியாளா்கள் தகுதிச் சரிபாா்ப்பு, பதிவு மற்றும் அட்டை உருவாக்குதல் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளையும் இலவசமாக வழங்குவாா்கள்.

Advertisement

Advertisement

இந்த அரிய வாய்ப்பை ஜிப்மருக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், அவா்களது உறவினா்கள் மற்றும் அனைத்து பொதுமக்களும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஜிப்மா் கேட்டுக் கொண்டுள்ளது.

பொது மக்கள் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை மற்றும் ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசியை எடுத்து வர வேண்டும். தொடா்புக்கு: 8903824770 / 0413-2297004.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments