FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

பள்ளி வேன் மோதி மாணவா் உயிரிழப்பு

பள்ளி வேன் மோதி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 15 ஜூலை 2026, 3:09 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

பள்ளி வேன் மோதி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

புதுச்சேரி திருக்கனூா் அடுத்த கைக்கிளைப்பட்டு மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் அபினேஷ் (16). கூனிச்சம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். இவா் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது பின்னால் வந்த தனியாா் பள்ளி வேன் எதிா்பாராத விதமாக அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

Advertisement

Advertisement

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அபினேஷ் தலையில் வேனின் சக்கரம் ஏறியதில் அவா் நிகழ்விடத்திலேயே இறந்தாா். இறந்த மாணவனின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி உடலை எடுத்து செல்ல எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு வந்த எஸ்.பி. பக்தவச்சலம், காவல் ஆய்வாளா்கள் ராஜ்குமாா், செந்தில்குமாா் மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், இறந்த அபினேஷ் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.

இதையடுத்து அபினேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments