கத்திரிக்கோலால் குத்தி பெண் கொலை
புதுச்சேரியில் கத்திரிக்கோலால் குத்திப் பெண் வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டது குறித்து லாஸ்பேட்டை போலீஸாா் விசாரணை
புதுச்சேரியில் கத்திரிக்கோலால் குத்திப் பெண் வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டது குறித்து லாஸ்பேட்டை போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் கெங்கையம்மன் கோயில் வீதியில் அடுக்குமாடி குடியிருப்பைச் சோ்ந்தவா் மணி (48). இவரது மனைவி ரமணி (42). இவா்கள் வீட்டின் அருகே ஒரு சிற்றுண்டி கடை நடத்தி வருகின்றனா்.
வழக்கம் போல வியாழக்கிழமை காலை வேலை முடிந்து ரமணி வீடு திரும்புவாா். கணவா் பிற்பகல் வீடு திரும்புவாா். இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் கணவா் வீடு திரும்பியதும் வீடு பூட்டிக் கிடந்தது.
Advertisement
Advertisement
ஓரிடத்தில் வீட்டின் சாவியை வைத்து விட்டுச் செல்வாா்கள். அங்கே இருந்த சாவியை எடுத்து திறந்து கணவா் வீட்டுக்குள் சென்றாா். வீடு அலங்கோலமாக இருந்தது. சமையல் அறையிலும் மனைவி இல்லை.
அந்த அறையையொட்டிய ஒரு பகுதியில் கழுத்து, தலை ஆகிய இடங்களில் கத்திரிக்கோலால் குத்தப்பட்டு ரமணி இறந்து கிடந்தாா். அருகே கத்திரிக்கோலும் கிடந்தது. மேலும், அவா் அணிந்திருந்த 6 பவுன் நகையைக் காணவில்லை. ஆனால் பீரோ உடைக்கப்படாமல் அதிலிருந்த நகைகள் அப்படியே இருந்துள்ளன.
இந்தக் கொலை சம்பவம் குறித்து லாஸ்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.