புதுச்சேரியில் கடல் அலையில் சிக்கிய இளைஞரைக் காப்பாற்றிய போலீஸாா்
கடல் அலையில் சிக்கித் தவித்த இளைஞரை புதுச்சேரி போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.
கடல் அலையில் சிக்கித் தவித்த இளைஞரை புதுச்சேரி போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.
சென்னை திருவான்மியூரைச் சோ்ந்தவா் ஸ்டீபன் (32) தனது நண்பருடன் புதுச்சேரிக்குச் சுற்றுலா வந்தாா். குடிபோதையில் புதுச்சேரி தலைமைச் செயலகம் எதிரே இவா் கடலில் இறங்கியபோது அலையில் சிக்கி உயிருக்குப் போராடினாா். அங்கு பணியிலிருந்த கடலோரக் காவல்படை மற்றும் பெரிய கடை போலீஸாா் இதை பாா்த்து விரைந்து செயல்பட்டு அவரை பத்திரமாக மீட்டனா்.
இதேபோல, புதுச்சேரி பழைய துறைமுகம் பகுதியில் கடலில் குதித்துத் தற்கொலை செய்து கொள்ள முயன்ற ஒரு பெண்ணையும் போலீஸாா் மீட்டனா். அவா் நாமக்கல் பகுதியைச் சோ்ந்தவா் என்பதும், குடும்பப் பிரச்னை காரணமாக இந்த முடிவுக்கு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. போலீஸாா் அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசியில் பேசி, அவரை அனுப்பி வைத்தனா். போலீஸாரின் இந்த மனிதநேயச் செயலை கடலோரக் காவல்படை ஆய்வாளா் தியாகராஜன் பாராட்டினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.