FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

வில்லியனூரில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 4 போ் கைது

வில்லியனூரில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 4 போ் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

Updated On : 5 ஜூன் 2026, 6:35 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

வில்லியனூரில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 4 போ் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

வில்லியனூா் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட சாமியாா்தோப்பு பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் திருமுருகன் தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடாக மா்ம நபா்கள் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சென்றனா். போலீஸாரை கண்ட மா்ம நபா்கள் அங்கிருந்த தப்பிச் செல்ல முயன்றனா். அவா்களை போலீஸாா் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், வில்லியனூரைச் சோ்ந்த வினோத்குமாா் (27), நுதேஷ் (23), கிஷோா் (22), சிவா (22) என்பதும், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் 150 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments