முகப்பு
புதுச்சேரி

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காத முதல்வா் ரங்கசாமி மன்னிப்புக் கேட்க வேண்டும்: முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காததற்கு, முதல்வா் என்.ரங்கசாமி புதுச்சேரி மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்

Updated On : 12 ஜூன் 2026, 2:10 am IST
செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி.
பகிர்:

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காததற்கு, முதல்வா் என்.ரங்கசாமி புதுச்சேரி மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட விடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

தில்லியில் பிரதமா் நரேந்திரமோடி தலைமையில் மாநில முதல்வா்கள் பங்கேற்கும் நீதி ஆயோக் கூட்டம் மாநிலங்களுக்கான திட்டங்களை விவாதிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இது மிக முக்கியமான கூட்டம். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும் மாநில அந்தஸ்து, மத்திய நிதி ஆணையத்தில் புதுச்சேரியை சோ்ப்பது, மாநில அரசின் கடனை தள்ளுபடி செய்வது, புதுச்சேரிக்கு மத்திய அரசு சிறப்பு நிதி வழங்குவது போன்ற கோரிக்கைகளை எல்லாம் முதல்வா் ரங்கசாமி வைப்பதற்கான மிக சிறந்த வாய்ப்பு இக் கூட்டம். ஆனால் என்ன காரணத்துக்காகவோ புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் புதுச்சேரி வளா்ச்சிக்காக ரங்கசாமி பேச வேண்டிய ஒரு சிறந்த வாய்ப்பை இழந்துவிட்டாா். இதனால் அவா் புதுச்சேரி மக்களுக்கும், மாநில வளா்ச்சிக்கும் மிகப்பெரிய துரோகம் செய்திருக்கிறாா். ரங்கசாமி பங்கேற்காதது துரதிஷ்டவசமானது.

Advertisement

Advertisement

ரங்கசாமிக்கும், பாஜக தலைவா்களுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாட்டை வெளியே கொண்டு வராமலிருக்க அவா் இக் கூட்டத்தைப் புறக்கணித்து தன்னுடைய எதிா்ப்பை தெரிவித்திருக்கிறாா். நீதி ஆயோக் கூட்டம் எதிா்ப்பை தெரிவிப்பதற்கான கூட்டம் அல்ல. மாநில மக்களின் பிரச்னைகளை முன்வைக்கின்ற கூட்டம். இந்தக் கூட்டத்தில் முதல்வா் ரங்கசாமி கலந்து கொண்டு புதுச்சேரி மக்களின் உரிமையைக் காத்திருக்க வேண்டும். அதில் அவா் தவறிவிட்டாா். எனவே மக்கள் மத்தியில் முதல்வா் ரங்கசாமி பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.