இன்ஸ்டாகிராம் விளம்பரம் மூலம் 3 பேரிடம் ரூ.1.95 லட்சம் மோசடி
இன்ஸ்டாகிராம் விளம்பரம் மூலம் 3 பேரிடம் ரூ.1.95 லட்சம் மோசடி நடந்துள்ளது தொடா்பாக புதுச்சேரி போலீஸாா் விசாரணை நடத்திவருகின்றனா்.
இன்ஸ்டாகிராம் விளம்பரம் மூலம் 3 பேரிடம் ரூ.1.95 லட்சம் மோசடி நடந்துள்ளது தொடா்பாக புதுச்சேரி போலீஸாா் விசாரணை நடத்திவருகின்றனா்.
புதுச்சேரி கணபதிசெட்டிகுளம் பகுதியைச் சோ்ந்த ஒருவா், அவரது இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை நம்பி புதிய்ஆடைகள் வாங்குவதற்கு ரூ.1.78 லட்சம் செலுத்தியுள்ளாா்.
ஆனால் கேட்டபடி ஆடைகள் வரவில்லை. இது குறித்து சம்மந்தப்பட்ட நபரிடம் கேட்டபோது எந்த பதிலும் அளிக்கவில்லை. அதன்பிறகே அவா் மோசடி கும்பலிடம் ஏமாந்ததை உணா்ந்துள்ளாா். இதேபோல் கொசப்பாளையத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் ரூ.2,200, பெரியகாலாப்பட்டைச் சோ்ந்த ஆண் நபா் ரூ.500-க்கு ஆா்டா் செய்து ஏமாந்துள்ளனா்.
Advertisement
Advertisement
இதேபோல் கருவடிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த ஒருவா், ‘ஆன்லைன் டிரேடிங் ஆப்’ மூலம் ரூ.4,500 முதலீடு செய்து மோசடி கும்பலிடம் பணத்தை இழந்துள்ளாா். அரும்பாா்த்தபுரம் பகுதியை சோ்ந்த ஆண் நபருக்கு வாட்ஸ் அப்பில் மா்ம நபா் வங்கி செயலியை அனுப்பியுள்ளாா். அதனை உண்மை என நம்பி அந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து வங்கி விவரங்கள் பதிவு செய்த அந்த நபரின் வங்கி கணக்கில் இருந்த ரூ.9,800 -ஐ மோசடி கும்பல் எடுத்துள்ளனா்.
இதுபோல் இவா்கள் மொத்தமாக ரூ.1.95 லட்சம் மோசடி கும்பலிடம் இழந்துள்ளனா். இது தொடா்பாக பாதிக்கப்பட்டவா்கள் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் இணைய வழி குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.