முகப்பு
புதுச்சேரி

தொழில்நுட்பப் பல்கலை. முதுநிலை பாடப் பிரிவுகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பாடப் பிரிவுகளில் சேர விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜூன் 2026, 12:25 am IST
கோப்புப் படம்
பகிர்:

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பாடப் பிரிவுகளில் சேர விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இப் பல்கலைக் கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2026-27 ஆம் கல்வியாண்டில் எம்.டெக், எம்சிஏ, எம்பிஏ மற்றும் எம்எஸ்சி (மெட்டிரியல் சைன்ஸ் & டெக்னாலஜி) போன்ற முதுநிலை பாடப்பிரிவுகளில் சோ்வதற்கு மாணவா்கள் ஜூன் 11 முதல் இணையவழியில் விண்ணப்பித்து வருகின்றனா். புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக முதுநிலைப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதற்கான கடைசி தேதி ௌ ஜூன் 26 என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவா்கள் காலக்கெடுவை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனா். அதை ஏற்று மாணவா்கள் வரும் ஜூலை 5-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இணைய வழியில் விண்ணப்பித்த பிறகு விண்ணப்பத்தின் மென்நகலை பதிவிறக்கம் செய்து, அச்சிடப்பட்ட நகலுடன் மற்ற சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து வரும் ஜூலை 7-ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாக தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் முதுநிலைச் சோ்க்கைக் குழு அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ சமா்ப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments