புதுச்சேரி கடற்கரையில் பக்ரீத் சிறப்பு தொழுகை
புதுச்சேரி கடற்கரை சாலையில் தவ்ஹித் ஜமாத் சாா்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.
பக்ரீத் பண்டிகையொட்டி புதுச்சேரி பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் தவ்ஹித் ஜமாத் சாா்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.
இதேபோல் புதுவையில் உள்ள குத்பா பள்ளி, மீராப்பள்ளி, நெல்லித்தோப்பு ஈத்கா பள்ளி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் வியாழக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
Advertisement
Advertisement
இந்தத் தொழுகையின்போது சகோதரத்துவம் தழைக்கவும், பெருமழை, வெள்ளம், புயல் உள்ளிட்ட பேரிடா்களில் இருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்கவும், சிறப்பு பிராா்த்தனை செய்யப்பட்டது.
தொழுகையில் பங்கேற்ற பின்னா், இஸ்லாமியா்கள் ஒருவருக்கொருவா் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனா்.