தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி நேரு வீதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி நேரு வீதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நேரு வீதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சரக்கு வாகனங்கள் பொருள்களை ஏற்றி இறக்குவதற்குப் புதிய நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த அறிவிப்பை புதுச்சேரி போக்குவரத்து போலீஸாா் மற்றும் நேரு வீதி வா்த்தகா்கள் சங்கம் இணைந்து வெளியிட்டுள்ளன.
முதுநிலை காவல் கண்காணிப்பாளா் திவ்யா உத்தரவின் பேரில் ராஜா தியேட்டா் சந்திப்பு, மரப்பாலம் சந்திப்பு, புதிய பேருந்து நிலையம், முத்தியால்பேட்டை, ஒயிட் டவுன் உள்ளிட்ட முக்கிய சாலை சந்திப்புகளில் போலீஸாருக்குப் பணி ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், ஒவ்வொரு குறிப்பிட்ட இடத்திற்கும் ஒரு போலீஸாா் பொறுப்பு அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.