வேதபுரீஸ்வரா் கோயில் குளம் தூா்வாரும் பணி நிறைவு
புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் குளத்தை முழுமையாக தூா்வாரும் பணி நிறைவடைந்ததையடுத்து, அதில் மீன்களை வெள்ளிக்கிழமை விடும் பணியில் ஈடுபட்ட ஊழியா்.
புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரா் கோயில் குளத்தை தூா்வாரும் பணி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
பிரசித்த பெற்ற வேதபுரீஸ்வரா் கோயிலின் பின்புறம் ஒரு ஏக்கா் பரப்பளவில் 40 அடி ஆழமுள்ள குளம் உள்ளது. இதில் 40-க்கும் மேற்பட்ட படிக்கட்டுகள் மற்றும் வட மேற்கு மூலை பகுதியில் ஒரு கிணறும், அதே திசையில் குளத்தின் மேற்புறத்தில் ஒரு பெரிய கிணறும் உள்ளன.
இதுதவிர கோயிலின் உள்புறத்தில், துா்கை அம்மன் சந்நிதி அருகில் ஒரு கிணறும், மடப்பள்ளியில் ஒரு கிணறும் உள்ளன.
Advertisement
Advertisement
கோயிலில் மழை நீா் மற்றும் அபிஷேக நீா் அனைத்தும் இந்த குளத்தில் விழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் வெளிப்புற சுற்றுப்புறத்தில் இருந்தும் நீா் ஊறி குளத்தில் சேரும் வகையில் குளம் அமைக்கப்பட்டிருக்கிறது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த குளம் தூா்வாரும் பணி கோயில் நிா்வாக அதிகாரி ராஜேஷ் கண்ணா தலைமையில் நடைபெற்று வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதையொட்டி குளத்தில் இருந்த 1.5 டன் கெளுத்தி மீன்கள் மீனவா்கள் மூலம் உயிருடன் பிடிக்கப்பட்டு, பாதுகாப்பாக 3 பிளாஸ்டிக் டேங்குகளில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை
புதுநீா் நிரப்பி, விடப்பட்டன. ஒவ்வொரு மீனும் ஒரு கிலோவுக்கு மேல் எடையுள்ளது.