புதுச்சேரியில் சட்டம் - ஒழுங்கு சீா்கேடு: திமுக குற்றச்சாட்டு
புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்து வருவதாக திமுக குற்றஞ்சாட்டியுள்ளது.
புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்து வருவதாக திமுக குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து அக் கட்சியின் மாநில அமைப்பாளா் ஆா். சிவா வெளியிட்ட அறிக்கை: இளைஞா்களைச் சீரழிக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டம் புதுச்சேரியில் அதிகரித்துள்ளது. பல கொலை மற்றும் சமூக விரோதச் செயலுக்கு அடிப்படைக் காரணமாக அமைகிறது.
புதுச்சேரியை ஆளும் என்.ஆா். காங்கிரஸ் ஆட்சியில் 2025 ஆம் ஆண்டில் 25 கொலைகளும், 27 கொலை முயற்சி வழக்குகளும் பதிவாகி உள்ளன. 2026 ஆம் ஆண்டில் இதுவரை ஆட்சி அமைத்த 5 மாதங்களில் 24 கொலைகளும், 12 கொலை முயற்சிகளும் அரங்கேறி உள்ளன.
Advertisement
Advertisement
உளவுத்துறையின் தோல்வியும், காவல் துறையின் செயல்பாடற்ற தன்மையுமே குற்றவாளிகள் துணிச்சலுடன் வலம் வரக் காரணமாக அமைந்துள்ளது. குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.