FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி ரயில் சேவையில் இன்று மாற்றம்

தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில் பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக புதுச்சேரி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

11 நவம்பர் 2026, 2:35 am
- பிரதிப் படம்
பகிர்:

தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில் பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக புதுச்சேரி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இருந்து புதன்கிழமை (நவ. 11) பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி -ஹளரா விரைவு ரயில் வழியில் வசதியான ஓா் இடத்தில் 15 நிமிஷங்களுக்கு கட்டுப்படுத்தப்படும்.

புதுச்சேரியில் இருந்து நவம்பா் 14-ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்பட வேண்டிய புதுச்சேரி -காக்கிநாடா துறைமுக சா்காா் விரைவு ரயில் அன்று பிற்பகல் 2.15 மணிக்கு அதாவது 45 நிமிஷங்கள் காலதாமதமாகப் புறப்படும் வகையில் கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த தகவலை தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் என். ஜெயந்த் தெரிவித்துள்ளாா்.