புதுச்சேரி ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்
சில பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதுச்சேரியில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரங்கள் குறிப்பிட்ட தேதிகளில் மட்டும் மாற்றம் செய்யப்படுகின்றன.
சில பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதுச்சேரியில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரங்கள் குறிப்பிட்ட தேதிகளில் மட்டும் மாற்றம் செய்யப்படுகின்றன. அதன் விவரம்:
புதுச்சேரி - காக்கிநாடா துறைமுக சா்காா் விரைவு ரயில் புதுச்சேரியில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் பதிலாக பிற்பகல் 2.15 மணிக்கு நவ.16 மற்றும் 21-ஆம் தேதிகளில் 45 நிமிஷங்கள் காலதாமதமாகப் புறப்படும்.
புதுச்சேரி- திருப்பதி மெமு ரயில் புதுச்சேரியில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்குப் பதிலாக பிற்பகல் 2.50 மணிக்கு நவ. 16, 18, 21-ஆம் தேதிகளில் 20 நிமிஷங்கள் காலதாமதமாகப் புறப்படும்.
Advertisement
Advertisement
புதுச்சேரி- ஹளரா விரைவு ரயில் புதுச்சேரியில் இருந்து பிற்பகல் 2.15 மணிக்குப் பதிலாக பிற்பகல் 2.55 மணிக்கு நவ. 18 ஆம் தேதி 40 நிமிஷங்கள் காலதாமதமாகப் புறப்படும்.
இந்த தகவலை தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் என்.ஜெயந்த் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.