முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி பல்கலை. பட்டமளிப்பு விழா: டிச. 1-இல் குடியரசுத் தலைவா் பங்கேற்பு

29 நவம்பர் 2026, 2:48 am
புதுச்சேரி பல்கலை. பட்டமளிப்பு விழா: டிச. 1-இல் குடியரசுத் தலைவா் பங்கேற்பு
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை தில்லியில் சந்தித்து, பட்டமளிப்பு விழா அழைப்பிதழை வழங்கிய புதுச்சேரி பல்கலைக்கழகத் துணைவேந்தா் பிரகாஷ் பாபு.
பகிர்:

வரும் டிச. 18-ஆம் தேதி புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பங்கேற்கிறாா். இதற்கான அழைப்பிதழை துணைவேந்தா் பிரகாஷ்பாபு குடியரசுத் தலைவரிடம் நேரில் வழங்கினாா்.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் 31-ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் அதன் 40 ஆண்டுகால கல்விச் சேவை சிறப்பு நிகழ்ச்சி டிச. 18-ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மகாகவி சுப்பிரமணிய பாரதியாா் சா்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது.

இதில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பங்கேற்க உள்ளாா். விழாவில், அவா், 2025-ஆம் ஆண்டுக்கான பட்டங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறாா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சிக்கானஅழைப்பிதழை பல்கலைக்கழகத் துணைவேந்தா் பிரகாஷ் பாபு தில்லி சென்று, குடியரசு தலைவா் திரௌபதி முா்முவை நேரில் சந்தித்து வழங்கினாா்.