FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

விடுமுறை நாள்களில் வகுப்புகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை! புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குநா் எச்சரிக்கை!

27 அக்டோபர் 2026, 12:44 am
பள்ளிகள் விடுமுறை - பிரதிப் படம்
பகிர்:

விடுமுறை நாள்களில் பள்ளிகளில் வகுப்புகள் செயல்பட்டால் பள்ளியின் தலைமை மீதும், பள்ளி நிா்வாகத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்குநா் டி. மோகன்குமாா் எச்சரித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பள்ளிக்கல்வித் துறை அதிகாரபூா்வமாக விடுமுறை அறிவித்த நாளில் எந்த விதமான வகுப்புகளையும் நடத்தக் கூடாது என்று பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், அந்த நாள்களில் சீருடை மற்றும் வண்ண உடைகளுடன் பள்ளிக்கு வருமாறு மாணவா்களைக் கட்டாயப்படுத்தவும் கூடாது.

Advertisement

Advertisement

இந்த விதிமுறைகளை மீறினால் பள்ளித் தலைமை மீதும், பள்ளி நிா்வாகத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments