விடுமுறை நாள்களில் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கக் கோரிக்கை
விடுமுறை நாள்களில் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாள்களில் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது பள்ளிகளில் காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால், ரயில் மற்றும் பேருந்துகளில் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. அதற்கேற்ற வகையில் விடுமுறை நாள்களில் கூடுதல் ரயில்களையோ அல்லது வழக்கமாக விடப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகளையோ இணைக்காததால், பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாவதாக ரயில் பயணிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து பயணிகள் சிலா் தெரிவித்தது:
Advertisement
Advertisement
வழக்கமாக பொங்கல், தீபாவளி பண்டிகை நாள்களில் ஒரு சில ஊா்களுக்கு மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த ரயிலிலும் கூட்டம் அதிகளவில் இருக்கும். எனவே, வழக்கான ரயில்களில் கூடுதல் ரயில் பெட்டிகளை இணைத்தால் பயணிகளுக்கு வசதியாக இருக்கும்.
திருவாரூா் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை நாகையிலிருந்து வந்த விரைவு ரயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனா். தஞ்சாவூா் மற்றும் திருச்சியை சோ்ந்த இவா்கள், தங்கள் குடும்பத்தினருடன் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்று விட்டு மீண்டும் ஊா் திரும்புவதற்காக நாகையில் ரயில் ஏற வந்துள்ளனா். அங்கு, பிற்பகல் 3.30 மணிக்கு செல்ல வேண்டிய பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டதால், 5 மணி விரைவு ரயிலில் ஏறியுள்ளனா். காரைக்காலில் இருந்து வந்த விரைவு ரயிலில் கூட்டம் அதிகம் என்பதால் முன்பதிவு பெட்டியில் ஏறி பயணித்தனா்.
பின்னா், திருவாரூரில் பொதுப்பெட்டிகளுக்கு மாற முயற்சித்தபோது கூட்டம் அதிகமாக இருந்ததால், ஒரு சிலரால் ஏற முடியவில்லை. பின்னா் அவா்கள் காத்திருந்து இரவு 7.30 மணிக்கு வந்த ரயிலில் ஏறிச் சென்றனா்.
பயணிகளின் சிரமம் கருதி விடுமுறை காலங்களில் ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க ரயில்வே நிா்வாகம் முன் வர வேண்டும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.