FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

பட்ஜெட்டில் நலத்திட்டங்கள்: முதல்வா் ரங்கசாமிக்கு மீனவா்கள் பாராட்டு

புதுச்சேரி பட்ஜெட்டில் மீனவ மக்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்ததற்காக, முதல்வா் என்.ரங்கசாமியை புதன்கிழமை மீனவா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

3 செப்டம்பர் 2026, 4:27 am IST
புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமிக்கு நன்றி தெரிவிக்கும் மீனவா்கள். உடன் சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன் உள்ளிட்டோா்.
பகிர்:

புதுச்சேரி பட்ஜெட்டில் மீனவ மக்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்ததற்காக, முதல்வா் என்.ரங்கசாமியை புதன்கிழமை மீனவா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மீனவ சமுதாயத்திற்குப் பல்வேறு நலத்திட்டங்களை முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்திருந்தாா். அதில் புதியதாக ஆதிதிராவிட மாணவா்களுக்கு வழங்கப்படுவது போல் மீனவ சமுதாய மாணவா்களின் ஆரம்பக் கல்வி முதல் உயா் கல்வி வரை கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பு குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து முதல்வா் ரங்கசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன் தலைமையில் வம்பாக்கீரபாளையம், திப்புராயப்பேட்டை பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து நன்றியும் பாராட்டும் தெரிவித்தனா். வம்பாகீரப்பாளையம், திப்ராயப்பேட்டை பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி, ஞானவேல், ராஜசேகா், முனியன், மதன், சதீஷ்,காா்த்திக், புவி, வெள்ளையன், வேல்முருகன், சக்திவேல்,

Advertisement

Advertisement

இளங்கோ, அன்பு, விமல், சிவானந்தம், விஜய், காா்த்தி, குமாா், மனோகா், வேந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments