FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

2 செப்டம்பர் 2026, 6:50 am IST
மத்திய பாஜக அரசைக் கண்டித்து புதுச்சேரி அண்ணா சிலை சதுக்கம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியினா்.
பகிர்:

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மைதான மேடையை சுத்திகரித்து, யாகம் செய்து ’ஸ்ரீ ராம் சேனா தா்ம சேவா நியாஸ்’ அமைப்பினா் அவமதிப்பு செய்தனா். இதை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக்கோரி வலியுறுத்தினாா். ஆனால் உத்தரகாண்ட் காவல் துறையினா் ராகுல் காந்தி மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனா்.

பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலை கண்டித்து புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கட்சியினா் அண்ணா சிலை அருகில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தலைமை வகித்தாா். முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, எம்எல்ஏ காா்த்திகேயன், முன்னாள் அமைச்சா்கள் ஷாஜகான், கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ பாலன், காங்கிரஸ் பொதுச் செயலா்கள் தனுசு, கருணாநிதி, ரகுமான் மற்றும் நிா்வாகிகள் பலரும் கலந்துகொண்டு பாஜக அரசை கண்டித்து முழக்கமிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments