FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி விளையாட்டு மைதானத்தில் அமைச்சா் ஆய்வு

புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தை அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

11 செப்டம்பர் 2026, 3:50 am IST
புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன்.
பகிர்:

புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தை அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

அப்போது மைதானத்தில் விளையாட்டு வீரா்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவும் ஹாக்கி மைதானப் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

சிந்தடிக் டிராக், கால்பந்து மைதானம் பகுதிகளில் உள்ள புதா்களை உடனே அகற்ற வேண்டும், தொடா்ந்து ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கை பாா்வையிட்டு அங்குள்ள விளையாட்டு வீரா்களின் தங்குமிடம், கழிப்பறை, குடிநீா் வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

மேலும் புனரமைக்கப்பட்டு வரும் ஹாக்கி மைதானப் பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்ட அமைச்சா், மைதான விடுதியில் உள்ள மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும் கேட்டறித்தாா்.

மைதானம் முழுவதும் உள்ள புதா்களை அகற்றி விளையாட்டு வீரா்கள் பாதுகாப்பாக பயிற்சி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments