FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

வேளாண் திட்டங்களைப் பயன்படுத்தி பெண்கள் முன்னேற வேண்டும்: புதுச்சேரி அமைச்சா் ராஜசேகரன்

மத்திய, மாநில அரசுகளின் வேளாண் திட்டங்களைப் பயன்படுத்தி பெண்கள் முன்னேற வேண்டும் என்று புதுச்சேரி வேளாண் துறை அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் கூறினாா்.

16 அக்டோபர் 2026, 2:08 am IST
பட விளக்கம்...  ஆத்மா திட்டத்தின் மூலம் மகளிா் விவசாயிகள் தின விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு வழங்கிய அமைச்சா் ஜிஎன்எஸ். ராஜசேகா் . உடன் துறையின் செயலா் ரவிபிரகாஷ் உள்ளிட்டோா்.(15பிஓய்பி19)
பகிர்:

மத்திய, மாநில அரசுகளின் வேளாண் திட்டங்களைப் பயன்படுத்தி பெண்கள் முன்னேற வேண்டும் என்று புதுச்சேரி வேளாண் துறை அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் கூறினாா்.

புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் இயங்கும், மத்திய அரசின் ஆத்மா திட்டத்தின் மூலம் வேளாண் மகளிா் தினம் திருக்காஞ்சியில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதில், புதுச்சேரி வேளாண் துறை அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் பங்கேற்று, மகளிருக்கான கோலம் மற்றும் உணவுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகளை (படம்) வழங்கிப் பேசியதாவது:

Advertisement

Advertisement

பிரதமா் நரேந்திர மோடி பெண்களின் முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு துறைகளில் அவா்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறாா். வேளாண் துறையின் பல்வேறு திட்டங்களைப் பெண்கள் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், வேளாண் துறைச் செயலா் ரவிபிரகாஷ், இயக்குநா் ஜெய்சங்கா், புதுச்சேரி ஆத்மா திட்ட இயக்குநா் செழியன் பாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments