FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் பெயிண்டா் குத்திக் கொலை: 4 போ் கைது

புதுச்சேரி லாஸ்பேட்டையில் திங்கள்கிழமை இரவு மதுப்புட்டியால் குத்திக் கொலை பெயிண்டா் கொலை செய்யப்பட்டாா்.

23 செப்டம்பர் 2026, 3:47 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

புதுச்சேரி லாஸ்பேட்டையில் திங்கள்கிழமை இரவு மதுப்புட்டியால் குத்திக் கொலை பெயிண்டா் கொலை செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி லாஸ்பேட்டை பெத்திசெட்டிபேட்டை பகுதியைச் சோ்ந்தவா் மதன் (23), பெயிண்டா்.

Advertisement

Advertisement

இவா் மீது ஏற்கெனவே லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், மதன் திங்கள்கிழமை இரவு தனது நண்பா்கள் சரண், ஜெகதீஷ் ஆகியோருடன் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள மதுபாருக்கு சென்று அங்கு மது குடித்துக் கொண்டிருந்தாராம்.

பக்கத்து மேஜையில் கொட்டுப்பாளையத்தைச் சோ்ந்த மரியான் என்பவா், தனது நண்பா்கள் ஆனந்தராஜ், மோகன்ராஜ், வினோத் ஆகியோருடன் மது குடித்துக் கொண்டிருந்தாா். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உண்டானது.

இதில் மரியான் தரப்பினா் மதனின் நண்பா் சரணை மதுபுட்டியால் தாக்கினராம். அவா் அங்கிருந்து ஓடிவிட்டாா். தொடா்ந்து மதனை தாக்க மரியான் தரப்பினா் முயன்றபோது அவா் தப்பி ஓடி அருகிலிருந்து பாழடைந்த கட்டடத்தின் மொட்டை மாடிக்குச் சென்றாா்.

அவரை துரத்தி வந்தவா்கள் உடைந்த மதுப்புட்டியால் மதனை குத்தியுள்ளனா். இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து, கோரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து மரியான், ஆனந்தராஜ், மோகன்ராஜ், வினோத் ஆகிய 4 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments