FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அம்மா ஆரோக்கியத் திட்டம் தொடக்கம்

ரிஷிவந்தியம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக அரசின் அம்மா ஆரோக்கிய திட்டத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

ரிஷிவந்தியம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக அரசின் அம்மா ஆரோக்கிய திட்டத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

 விழாவுக்கு மருத்துவ அலுவலர் எஸ்.முகிலன் தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர்கள் எம்.சரண்யா, அருண், மணிகண்டன், விக்ரமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுகாதார ஆய்வாளர் இரா.தெய்வீகன் வரவேற்றார்.

Advertisement

Advertisement

 விழாவில் ஊராட்சித் தலைவர் மு.அமுதமொழி கலந்துகொண்டு, அம்மா ஆரோக்கியத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

 மருத்துவ அலுவலர் எஸ்.முகிலன் பேசுகையில், இத்திட்டத்தின் மூலம் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்த வகை, பல், கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சை பெறலாம் என்றார்.

 மருத்துவ அலுவலர் சரண்யா பெண்களுக்கான புற்றுநோய், மாதவிடாய் பற்றிய ஆலோசனைகள், கருவுற்ற தாய்மார்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், குழந்தை பிறந்த பின்னர் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகளை விளக்கிக் கூறினார்.

 இதில், சுகாதார செவிலியர்கள் அமுதா, சாந்தி, சுகந்தி, சுபாஷினி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments