தலைமைக் காவலர் பணியிட மாற்றம்
விழுப்புரம் அருகே மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக, தலைமைக் காவலர் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
விழுப்புரம் அருகே மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக, தலைமைக் காவலர் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்தல் தொடர்கிறது. இதுகுறித்து, போலீஸார் தனிப்படை அமைத்து கண்காணித்தும், மணல் திருட்டு குறைந்தபாடில்லை.
இந்த நிலையில், விழுப்புரம் அருகே அரசூர், திருவெண்ணெய்நல்லூர் பகுதி தென்பெண்ணை ஆற்றில் மணலை கடத்தும் வாகன ஓட்டிகளுக்கு, ஆதரவாக செயல்படுவதாக போலீஸார் மீது புகார் எழுந்தது. இதன் பேரில், ஆய்வு செய்யப்பட்டு, மணல் கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டதாக திருவெண்ணெய்நல்லூர் தலைமைக் காவலர் திருஞானசம்பந்தத்தை, விழுப்புரம் ஆயுதப்படைப் பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்து, விழுப்புரம் எஸ்.பி.ஜெயக்குமார் புதன்கிழமை உத்தரவிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.