FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

முருகன் கோயில்களில் ஆடிக் கிருத்திகை

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை ஆடிக்கிருத்திகை விழா கோலாகலமாக நடைபெற்றது.

Updated On : 6 ஆகஸ்ட் 2018, 9:18 am IST
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை ஆடிக்கிருத்திகை விழா கோலாகலமாக நடைபெற்றது.
 செஞ்சி - திருவண்ணாமலை சாலை, ஏரிக் கரையில் அமைந்துள்ள முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 விழாவை முன்னிட்டு, ஜூலை 27-ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து, சனிக்கிழமை காலை அபிஷேக, ஆராதனைகள், இரவு ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி வீதியுலா நடைபெற்றது.
 இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை செஞ்சி எம்.ஜி.ஆர். நகரில் அமைந்துள்ள ஸ்ரீமகாமாரியம்மன் கோயிலில் இருந்து 108 பால்குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
 தொடர்ந்து அக்னி சட்டி ஊர்வலம், சக்திவேல் வீதியுலா, மிளகாய்ப் பொடி அபிஷேகம், செடல் சுற்றுதல், மழுவேந்தல், தீ மிதித்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செலுத்தினர்.
 பகல் 12 மணிக்கு அன்னதானமும், தொடர்ந்து ஸ்ரீவள்ளி தேவசேனா ஸ்ரீசுப்ரமணிய சுவாமி வீதியுலாவும் நடைபெற்றன.
 இதேபோல, விழுப்புரம் நாவலர் நெடுந் தெருவில் அமைந்துள்ள பாலமுருகன் கோயில், அவலூர்பேட்டை சித்தகிரி முருகன் கோயிலில் விழா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments