FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வெறிச்சோடிய சென்னை ரயில்கள்!

திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததையடுத்து, தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட ரயில்கள் பயணிகள் கூட்டமின்றி புதன்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததையடுத்து, தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட ரயில்கள் பயணிகள் கூட்டமின்றி புதன்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.
திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை இரவு கடைகள் அடைக்கப்பட்டன. பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள், வெளியூர் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். விழுப்புரம் மாவட்டத்திலும் புதன்கிழமை இரவு வரை பேருந்துகள் இயக்கப்படாததால் பெரும் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில், புதன்கிழமை தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட ரயில்கள் கூட்ட நெரிசலின்றி சென்றன.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்குச் செல்லும் ரயில்களில் முன்பதிவு செய்திருந்த ஏராளமானோர் முன்பதிவை ரத்து செய்ததால், முன்பதிவு பெட்டிகள் பயணிகளின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
தினசரி கூட்ட நெரிசலுடன் செல்லும், புதுவை-சென்னை பயணிகள் ரயில், புதன்கிழமை காலை 6.50 மணிக்கு விழுப்புரம் வழியாக காலியாகவே வந்து சென்றது. 
தொடர்ந்து காலை 9.30க்கு சென்னை சென்ற காரைக்குடி-சென்னை பல்லவன் விரைவு ரயிலிலும் முன்பதிவில்லாத பெட்டிகளில் சிறிதளவு பயணிகள் கூட்டம் இருந்தன.
தொடர்ந்து,  பகல் 11.40க்கு மதுரையிலிருந்து சென்னை சென்ற வைகை அதிவிரைவு ரயிலில், முன்பதிவு பெட்டிகள் காலியாகவே இருந்தன.
முன்பதிவில்லாத பெட்டிகளில் மட்டும் ஓரளவுக்கு பயணிகள் சென்றனர். இதேபோல, காலை சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்குச் சென்ற குருவாயூர் விரைவு ரயில், சோழன் விரைவு ரயில், வைகை அதிவிரைவு ரயில், புதுச்சேரி ரயில்களும் காலியாகவே சென்றன.
திமுக தலைவர் மறைவையொட்டி அரசு பொது விடுமுறை, கடைகள் அடைப்பு, பதற்ற நிலை காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்ல வேண்டிய பயணிகள் ரயில் பயணத்தைத் தவிர்த்தனர். இதனால், புதன்கிழமை எப்போதும் இல்லாத வகையில், ரயில்களில் கூட்டநெரிசலின்றி காணப்பட்டது.
எனினும், ரயில்வே போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். புதன்கிழமை இரவு சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட  ரயில்களில் கூட்ட நெரிசல் இருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments